காலையில் இந்த சாற்றினை குடித்தால் போதும் உடல் புத்துணர்ச்சி பெறுவது உறுதி!
பலருக்கு காலை எழுந்து குளித்து முடித்து வேலைக்கு சென்றாலும் உடல் சோர்வாக இருக்கும் இதற்கு பலர் உடற்பயிர்ச்சி செய்யும்படி ஆலோசனை கூறுவார். சிலருக்கு நேரம் இருக்கும். சிலருக்கு நேரம் இருக்காது அப்படி உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் இந்த சாற்றினை பருகுங்கள் அன்றைய நாள் முழுவதும் மூளையும் உடலும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி புதினா இலை, ஒரு முக்கால் கைப்பிடி கொத்தமல்லி இலை கொஞ்சம் உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். அடுத்து, இதனுடன் இரண்டு எலுமிச்சை பழங்களின் சாற்றினை சேர்த்து மீண்டும் அரைத்து கொள்ளுங்கள்.
இந்த சாறு இரண்டு டம்ளர் அளவு இருக்கும். இதனை வடிகட்டி குடித்தாலே போதும். அன்றைய நாள் முழுவதும் மூளை புத்துணர்ச்சியுடன் இருக்கும். செரிமான கோளாறுகளை அகற்றிவிடும். முகம் பொலிவு பெரும்.