நடிகர் விவேக்கின் மறைவிற்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் – நடிகர் புரோட்டா சூரி!
நடிகர் விவேக் அவர்களின் மறைவுக்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் என நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் சூரி அவர்கள் தெரிவித்துள்ளார்.
காமெடி நடிகர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் புரோட்டா சூரி அவர்களும் தற்பொழுது நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நடிகர் விவேக் அவர்களுக்கு இப்படிப்பட்ட ஒரு கொடூரமான சூழ்நிலை விவேக் அவர்களுக்கு வந்திருக்கக் கூடாது எனவும், அவர் சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும் அவர் ஒரு காமெடியன் அல்ல, அவர் தான் உண்மையான ஹீரோ எனவும் தெரிவித்துள்ளார். மேலும், சமூக ஆர்வலராக இருந்த விவேக்கின் மறைவிற்கு கோடிக்கணக்கான மரங்கள் கண்ணீர் சிந்தும் எனவும், நீங்கள் இந்த உலகம் உள்ளவரை எங்களோடு கூட இருப்பீர்கள் எனவும் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.