சீன அதிபரை விமர்சித்த கோடீஸ்வரருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை.!

Default Image

கொரோனா வைரஸ் தொற்றுநோயை ஜனாதிபதி ஜி ஜின்பிங் கையாண்டதை விமர்சித்த சீன கோடீஸ்வரர் ஊழல் குற்றச்சாட்டில் 18 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

சீன மூத்த அதிகாரிகளுடன் நெருங்கிய உறவைக் கொண்ட ஓய்வுபெற்ற ரியல் எஸ்டேட் அதிபர் ரென் ஷிகியாங் கடந்த  மார்ச் மாதம் ஒரு கட்டுரையை ஆன்லைனில் வெளியிட்டார் அதில்,  டிசம்பர் மாதம் மத்திய நகரமான வுஹானில் தொடங்கிய கொரோனாவை ஷி தவறாகக் கையாண்டதாக குற்றம் சாட்டினார்.  இந்த கட்டுரைக்கு பின்னர் பொது பார்வையில் இருந்து மறைந்தார். பின்னர், ரென் ஷிகியாங் மீது ஊழல் தொடர்பான குற்றங்கள் சுமத்தப்பட்டன.

மேலும், இவர் 2012 ல் ஜி ஜின்பிங் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து பெய்ஜிங் சிவில் சமூகத்தின் மீதான தனது ஒடுக்குமுறையை முடுக்கிவிட்டுள்ளது, பேச்சு சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது மற்றும் நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களை தடுத்து வைத்தது போன்ற பல்வேறு  குற்றசாட்டுகளை ரென் ஷிகியாங் முன்வைத்து வந்தார்.

இந்நிலையில், இன்று பெய்ஜிங்கில் உள்ள ஒரு நீதிமன்றம், பொது நிதியில் சுமார் 3 16.3 மில்லியன் மோசடி, லஞ்சம் வாங்குதல், மற்றும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளில் ரென் குற்றவாளி எனக் கூறி
நீதிபதிகள் அவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து 620,000 டாலர் (4.2 மில்லியன் யுவான்) அபராதம் விதித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்