ஒரே ஒரு பேஸ்புக் பதிவினால் கோடீஸ்வரியான ஹோட்டல் ஊழியர்..!

Published by
லீனா

அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஜாஸ்மின் காஸ்டிலோவுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸாக கொடுத்த பெண். 

பொதுவாகவே நாம் உணவகங்களுக்கு சென்று உணவு சாப்பிட்டால் அங்கு நமக்கு பரிமாறும் உணவக ஊழியர்களுக்கு டிப்ஸ் கொடுப்பது வழக்கம். சில சமயங்களில் நாமும் கூட கொடுத்திருப்போம். அந்தவகையில் இந்த டிப்ஸ் குறைந்தது பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய் வரை கொடுப்பதுண்டு. மேலும் சிலர், நமது மனதின் தன்மைக்கு ஏற்ப அதிகமாகவும் கொடுப்பதுண்டு.

இந்த நிலையில் அமெரிக்காவின் அட்லாண்டாவில் இயங்கிவரும் உணவகம் ஒன்றில் ஜாஸ்மின் காஸ்டிலோ என்ற பெண் ஊழியர் பணியாற்றி வருகிறார். அந்த உணவகத்திற்கு  ரிட்டா ரோஸ் என்ற பெண் தனது தாயாருடன் வந்து உணவருந்தினார். அவர்கள் இருவரும் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகை 30 அமெரிக்க டாலர்கள். அப்போது அந்த பெண் உணவு பரிமாறிய ஜாஸ்மினுக்கு 20 அமெரிக்க டாலர்களை டிப்ஸ் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து ரீட்டா ரோஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நானும் எனது அம்மாவும் IHOP உணவகம் சென்றிருந்தோம். அங்கு எங்களுக்கு உணவு பரிமாறிய ஜாஸ்மின் என்ற சப்ளையர் மிகவும் சிறப்பாக அவரது பணியில் ஈடுபட்டார். மிகவும் கனிவாக எங்களை கவனித்து பொறுமையுடன் உணவை பரிமாறினார். அவரது தொழில்முறை நேர்த்தியாக இருந்தது அதற்காக அவருக்கு இருபது டாலர் டிப்ஸ் கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட அவர் இந்த 20 அமெரிக்க டாலர் தனக்கான பெரிய உதவி என்றும் சொல்லியிருந்தார்.

இந்த பணி அவர் விருப்பம் இல்லாமல் செய்தாலும், தனது குழந்தை மற்றும் குடும்பத்திற்காக இந்த பணியை செய்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன் எனவே உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என பதிவிட்டு, ஜாஸ்மினின் ‘கேஸ் ஆப்’ விவரங்களையும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவினை பார்த்த மற்ற முகநூல் பயனர்கள் ஜாஸ்மினின் கேஸ் ஆப் செயலிக்கு அமெரிக்க டாலர்களை அனுப்பத் தொடங்கினார். முதலில் சிறிய அளவு தொகையை மக்கள் அனுப்ப தொடங்கிய நிலையில், நாளடைவில், அவரது வாங்கி கணக்கில் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் சேர்ந்துள்ளது.

இது குறித்து ஜாஸ்மின் கூறுகையில், எனது போனில் உள்ள கேஸ் ஆப் செயலியின் ரிங்டோன் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Recent Posts

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

35 minutes ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

1 hour ago

மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…

2 hours ago

“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…

2 hours ago

விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினம்… பிரேமலதா கண்ணீர் மல்க அஞ்சலி!

சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…

2 hours ago

துவங்கியது இறுதி ஊர்வலம்… யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் உடல் தகனம்.!

டெல்லி:  மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…

3 hours ago