சோனு சூட் கட் -அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்..!!
ஆந்திராவில் நடிகர் சோனு சூட் கட் -அவுட்டுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரபல நடிகரான சோனு சூட் கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார். அதுமட்டுமின்றி, தற்போது ஆக்ஜின் சிலிண்டர், மருத்துவமனைக்கு தேவையான உதவிகள் என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சோனு சூட் கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு (சோனு சூட் பவுன்டேஷன்) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்புக்கு மக்கள் பல சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் என பலர் தங்களால் முடிந்த பண உதவி செய்து வருகின்றார்கள்.
சோனு சூட் தொடர்ந்து உதவி செய்து வருவதால் அவருக்கு பல தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தின் ஸ்ரீகலஹஸ்தியில் ரசிகர்கள் சிலர் சோனு சூட் கட் -அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்துள்ளார்கள் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ఆంధ్రప్రదేశ్లోని చిత్తూరు జిల్లాలోని శ్రీకలహస్తిలో, సోనూసూద్ పరిమాణ ఫోటోను పాలతో కురిపించారు, ఈ కార్యక్రమం ద్వారా సోను సూద్ను ప్రేరణగా తీసుకొని ఇతరులకు సహాయం చేయాలని అందరికీ తెలియజేయడానికి ప్రయత్నించిన పులి శ్రీకాంత్.#SonuSood #SonuSoodRealHero pic.twitter.com/m1iTX1lG1G
— Sonu Sood Trends (@sonusoodtrends) May 20, 2021