Flight Crash: ரஷ்யாவில் 15 பேருடன் புறப்பட்ட ராணுவ சரக்கு விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில மணி நேரத்திலேயே இவானோவோ பிராந்தியத்தில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
மாஸ்கோவில் இருந்து வெளியான தகவலின்படி, இலியுஷின்-76 விமானம் மாஸ்கோவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவானோவோ பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த போது அதன் இயந்திரம் ஒன்றில் தீப்பிடித்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் கூட உயிர் பிழைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன, விமானிகள் உள்பட 8 பணியாளர்கள், 7 ராணுவ வீரர்கள் விமானத்தில் சென்றதாக ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, உக்ரைனில் இரண்டு வருடங்களாக நடத்திய போர் தாக்குதலின் போது துருப்புக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் வான்வழி மற்றும் தரைவழி போக்குவரத்தை பயன்படுத்துவது கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமானLICயின் இணையதள முகப்பு பக்கமானது இன்று காலை முதல் இந்தி மொழியில் காணப்பட்டது.…
பெங்களூரு : நாம் வாழும் இந்த வாழ்க்கையில் ஒவ்வொரு கனவுகளைச் சுமந்துகொண்டு அந்த கனவு எப்போது நிறைவேறும் என்று யோசித்து…
ரஷ்யா : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைவில் இந்தியா வரவுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு கிரெம்ளின் மாளிகை பத்திரிகை…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியை எந்த வீரர் கேப்டனாக விளையாடி வழிநடத்தப் போகிறார்…
சென்னை : தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : ஆரம்பக் காலத்தில் நண்பர்களாக இருந்த தனுஷ் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையே தற்போது ஏற்பட்ட பிரச்சினை திரைத்துறையில்…