மியான்மரில் ராணுவத்தினர் துப்பாக்கிசூடு.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 557-ஆக உயர்வு!

Default Image

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது.

மியான்மரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய கட்சி வெற்றி பெற்றது. அவர்களின் ஆட்சியை ஏற்க ராணுவம் மறுத்ததை தொடர்ந்து, ராணுவத்திற்கும், மியான்மர் அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கடந்த மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

பின்னர் ஆங் சான் சூச்சி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களை ராணுவ படையினர் வீட்டு காவலில் வைத்தனர். ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ராணுவம் எச்சரித்தும், போராட்டம் நடைபெற்று வருவதால் போராட்டத்தை ஒடுக்க ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மோனிவா நகரப்பகுதிகளில் ராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியது. இதில் 3 பொதுமக்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை 557 ஆக உயர்ந்துள்ளது. போராட்டம் நடத்தும் பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தும் மியான்மர் ராணுவத்துக்கு ஐ.நா. மற்றும் சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ராணுவத்தினர், அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்