இந்தியா புறப்பட்ட அமெரிக்க அமைச்சர்கள்.. நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை!
இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக, இந்திய – அமெரிக்க வெளியூரவு அமைச்சர்கள் நாளை டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் இருநாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்காக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர், இந்தியா புறப்பட்டனர். 3 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
அமைச்சர்கள் மட்டுமின்றி, பிரதமர் மோடியையும் அமைச்சர்கள் சந்திக்கவுள்ளார். இதில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள ராணுவ தொழில்நுட்பம் தளவாடங்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் பகிர்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும், லடாக் விவகாரம் குறித்து பேசப்படும் என தகவல்கள் வெளியானது.