நீங்கள் யார் தலையிட???விதிகளை மீறி விட்டீர்கள் பாம்பியோ… சீனா கொதிப்பு

Default Image

அமெரிக்க வெளியுறத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவின் பேச்சுக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா ,இந்தியா இடையே பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தையானது நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க அமெரிகாவில் இருந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வருகை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 2+2 பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் இந்திய இறையாண்மையை காப்பதற்காக இந்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா துணைநிற்கும் என்றும் அதிரடியாக தெரிவித்ததோடு எல்லை மற்றும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவை  கடுமையாக சாடினார்.

மைக் பாம்பியோவின் இந்த பேச்சுக்கு  சீனா தரப்பில் சர்வதேச, அடிப்படை தூதரக உறவுகளுக்கான விதிமுறைகளை மீறிய மைக் பாம்பியோவின் பேச்சு என்று கடுமையாக விமர்சித்துள்ளது.

மேலும் எல்லை விவகாரம் இந்தியா, சீனாவுக்கு இடையிலானது என்றும், இதில் மூன்றாம் தரப்பு தலையிட இடம் கொடுக்கப்படாது என்று சீன தூதரகம் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்கா பழைய பொய்களையே மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டு வருக்கிறது. எல்லை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யும் திறன் இரு நாடுகளுக்கும் உள்ளது.

கொரோனா விவகாரத்தில் உலக மக்களை சீனாவுக்கு எதிராக அமெரிக்க திசைதிருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய சீனா கொரோனா பரவலை தடுப்பதில் சீனா மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்