ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது…!! பால்வளம் பளீர் பேச்சு..!!!
கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு விவகாரத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஆட்சியை கலைக்க நாடகம் நடக்கிறது என்று தெரிவித்த அவர் முதலமைச்சரை நேரடியாக எதிர்க்க தெம்பும், திராணியும் இல்லாதவர்கள், இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.