இயக்குநர் குழுவில் இருந்து விலகினார் நிறுவனர் பில்கேட்ஸ்!கதிகலங்கிய மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து விலகி உள்ளார்.
இது குறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்ட தகவலின் படி மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு பொறுப்பில் இருந்து விலகி விட்டார் என்றும் அவர் தமது நேரத்தை சுகாதாரம்,கல்வி,சுற்றுச்சுழல் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரச்சனைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்நிறுவனம் அவர் குழுவில் இருந்து விலகினாலும் தொடர்ந்து நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்ப ஆலோசகராக இருப்பார் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி இஒ சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது.2000 ஆம் ஆண்டு வரை நிறுவனத்தின் சிஇஒவாக இருந்தார்.அவருடைய விலகல் மைக்ரோசாப்ட்க்கு சற்று வருத்தத்தை கொடுத்தாலும் தொடர்ந்து ஆலோசகாரக இருப்பார் என்ற முடிவால் சற்று மகிழ்ச்சியில் உள்ளது