பிரபல நடிகை மியா ஜார்ஜிற்கு தொழிலதிபரான அஸ்வின் பிலிப் என்பவருடன் தேவாலயத்தில் வைத்து திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் ஆர்யாவின் சகோதரர் நடிப்பில் வெளியான அமரகாவியம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து விஷ்ணு விஷாலுடன் இன்று நேற்று நாளை, சசிக்குமாருடன் வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவருக்கு அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபருடன் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்துள்ளதாகவும் ,அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களது திருமணம் கோட்டயத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் வைத்து நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிக எளிமையாக நடைப்பெற்றுள்ளது. தற்போது இந்த ஜோடிக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர்களது திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…