ஜனவரி 5 ஆம் தேதி வெளிவரவுள்ள Mi 10i.. கேமரா உட்பட முக்கிய விபரங்கள் கசிந்தது!
சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் போனான Mi 10i, அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன் விபரங்கள், ட்விட்டரில் கசிந்தது.
சீனா நாட்டின் ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நிறுவனம், இந்தியாவில் வரும் ஜனவரி 5 ஆம் தேதி Mi 10i ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த போன், அமேசான் வலைத்தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போனின் உள்ள முக்கிய விபரங்கள் அனைத்தும் ட்விட்டரில் கசிந்தது.
அதன்படி இந்த மொபைலில்,
- 6.67′ இன்ச் 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட Full HD+ LCD டிஸ்பிளே
- இதில் 120 Hz Refreshing rate மற்றும் 240 Hz ஸ்க்ரீன் டச்சிங் ரேட்
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்
- பின்புறத்தில் 4 கேமரா. 108 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள், 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்.
- 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
- 4,820 எம்ஏஎச் பெரிய பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங்
- 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ்
- எம்ஐயுஐ 12-க்கு மேல் ஆண்ட்ராய்டு 11
இந்த Mi 10i ஸ்மார்ட்போன், அமேசானில் விற்பனைக்கு வரவுள்ள நிலையில், அதன் விலை, ஸ்பெசிபிகேஷன், உட்பட அனைத்து விபரங்களை தெரிந்து கொள்ள ‘Notify me’ எனும் வசதியை க்ளிக் செய்ய வேண்டும்.