திருச்சியில் 8 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட பேலஸ் திரையரங்கில் எம்ஜிஆரின்’உரிமைக்குரல்’ படம் திரையிடப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தது . இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க தொடங்கியுள்ளது. திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புது திரைப்படங்கள் வெளியிடப்பட மாட்டாது என்று கூறப்பட்டது . எனவே பல தியேட்டர்களில் பழைய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றது .
அதன்படி திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள பேலஸ் திரையரங்கில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு எம்ஜிஆர் நடித்த உரிமைக்குரல் திரையிடப்பட உள்ளது . அதனை ரசிகர்கள் ஆர்வத்துடன் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கண்டு களித்தனர் . மேலும் பேலஸ் திரையரங்கில் தெலுங்கு ரீமேக் படங்களை தீபாவளி முதல் திரையிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது .
திரையரங்குகளில் வருபவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி டிக்கெட் வாங்கி கொண்டனர் . அதனையடுத்து கைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னர் ஒரு இருக்கையிலிருந்து மற்றொரு இருக்கைக்கு இடைவெளி விட்டு அமர வைக்கப்பட்டனர் . திருச்சியில் பேலஸ் திரையரங்கை போன்று மேலும் 4 தியேட்டர்கள் திறக்கப்பட்டு பழைய திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளதாக பேலஸ் திரையரங்க உரிமையாளரான சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…
சென்னை : நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று முன்தினம் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு பதிலாக கடவுள்…