“கோலாகலத்துடன் MGR நூற்றாண்டு விழா” நாளையோடு முடிகிறது..!!

Default Image

சென்னை,

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா கோலாகலமாக நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவில் எம்.ஜி.ஆருடன் திரைப்பட துறையில் பணியாற்றிய நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள்.

Image result for டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:–
டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு டாக்டர் எம்.ஜி.ஆரின் நினைவைப் போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், அவர் மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவரின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் மற்றும் வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட திட்டமிடப்பட்டு, முதலமைச்சரின் ஆணையின்படி இதுவரை 31 மாவட்டங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Image result for டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டுடாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற ஒவ்வொரு மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாவட்டத்திற்கான புதிய அறிவிப்புகளை மக்கள் நலன் கருதி அறிவிக்கப்பட்டன. இதுவரை டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்ற 31 மாவட்டங்களில், முதலமைச்சரால் ரூபாய் 5,140.18 கோடி மதிப்பில் 2,357 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், ரூபாய் 5,747.24 கோடி மதிப்பில் 3,214 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூபாய் 5,464.79 கோடி மதிப்பில் 8,26,392 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் சிறப்பித்ததோடு அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 547 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

Image result for MGR அரசு நலத்திட்ட உதவிகள்அதன் தொடர்ச்சியாக, டாக்டர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் தமிழ்நாடு 50ம் ஆண்டு பொன்விழா சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 3.30 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில், டாக்டர் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்தினை திறந்து வைத்தும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா மலரை வெளியிட்டும், எம்.ஜி.ஆருடன் திரைத் துறையில் பணியாற்றிய நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், வசனகர்த்தா, உரையாடல் ஆசிரியர்கள், நடனக் கலைஞர்கள், படத் தொகுப்பாளர்கள், சண்டைப் பயிற்சியாளர், ஒப்பனைக் கலைஞர், புகைப்படக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், ஒலி வடிவமைப்பாளர், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோரை கௌரவித்தும், எம்.ஜி.ஆர். சட்டமன்றத்தில் ஆற்றிய உரைகள் மற்றும் எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டும், தமிழ்நாடு பொன்விழா ஆண்டையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவித்து, காசோலை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கியும், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் உரையாச்சுகிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.Image result for புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றைநாளை நடக்கும் இவ்விழாவில் , புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றையும், அவர் மக்களுக்கு ஆற்றிய சமூகத் தொண்டு, சீர்திருத்தங்கள், மக்கள் நலனுக்காக செயல்படுத்திய திட்டங்கள் பற்றிய புகைப்பட கண்காட்சியும் தமிழ்நாடு அரசின் சாதனைகள், திட்டங்கள், வழங்கப்பட்ட நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்கள் பார்வையிடும் வகையில் 31 அரசு துறைகள் பங்கேற்கும் சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். புகழ் பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.
இவ்விழாவில் அமைச்சர்கள், சட்டப்பேரவை துணைத் தலைவர், அரசு தலைமை கொறடா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் வாரியத் தலைவர்கள் பங்கேற்று சிறப்பிப்பார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வரவேற்புரை ஆற்றவுள்ளார்கள். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறையின் அரசுச் செயலாளர் திரு.இரா.வெங்கடேசன், இ.ஆ.ப., அவர்கள் நன்றியுரை ஆற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்