எம்.ஜி நிறுவனம் களமிறங்கியுள்ள பேட்டரி வாகனமான எம்.ஜி இசட்.எஸ் எனும் மாடலை களமிறக்கியுள்ளது.
வருகாலத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும் வாய்ப்புள்ளதால் பேட்டரியில் இயங்கும் வணங்களுக்கு தற்போது மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகின்றன. வாகன பிரியர்களுக்கு தங்கள் கவனத்தை பேட்டரி வாகனம் மீது திரும்பியுள்ளனர்.
இதன் காரணமாக பல முன்னணி மோட்டார் நிறுவனங்கள் பேட்டரியில் இயங்கும் வாகனங்களை தயாரித்து வெளியிடும் முனைப்பில் உள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் பேட்டரி வாகனங்களில் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என அடித்து கூறுகின்றனர் மோட்டார் வாகன நிபுணர்கள்.
பேட்டரியில் இயங்கும் கார்களை ஹூண்டாய், நெக்ஸான் ஆகியவை உருவாக்கி களமிறக்கியுள்ளன. இதில் ஹூண்டாய் கோனா கார்களுக்கு நேரெதிர் போட்டியாக எம்.ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய பேட்டரி காரண எம்.ஜி.இசட்.எஸ் எனும் மாடலை களமிறக்கியுள்ளது.
இந்த மாடலை கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எம்.ஜி நிறுவனம் பேட்டரியில் இயங்கும் காரை 10 லட்சம் ரூபாய்க்கு களமிறக்கியுள்ளது.
இது குறித்து எம்.ஜி மோட்டார்ஸ் மூத்த அதிகாரி கூறுகையில், ‘ அடுத்த சில ஆண்டுகளில் பேட்டரி வாகனங்களின் வரவு அதிகமாக இருக்கும். அதனால் எங்கள் நிறுவனம் சார்பாக பெட்டரி வாகனங்களை களமிறக்குவோம். மேலும், டீலர்கள் மூலம் ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள், நடமாடும் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்’ என அவர் தெரிவித்தார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…