கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் ஆடைகளை கரடி பொம்மைகளாக மாற்றும் பெண்…!
மெக்ஸிகோவில் உள்ள பேஷன் டிசைனர் ஒருவர்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் ஆடைகளில் கரடி பொம்மைகளை தயாரித்து வருகிறார்.
மெக்ஸிகன் மருத்துவமனைகள் பொதுவாக,அதிக அளவில் நிரம்பிய மருத்துவமனை வார்டுகள்,தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் தொற்று பரவுதல் போன்ற பயத்தினால் இறக்கும் நபரை பார்க்க குடும்ப உறுப்பினர்களையே அனுமதிக்காது.
இந்த நிலையில்,மெக்ஸிகோ ஆடை வடிவமைப்பாளர் இர்மா டி லா பர்ராவின் நீண்ட கால நண்பர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ஜனவரி மாதம் இறந்தார்,இந்த சம்பவம் பர்ராவுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து இர்மா டி லா பர்ரா,கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் பல குடும்பங்களைப் பற்றி சிந்தித்து,அவர்களுக்கு முடிவில்லாத ஆறுதலை வழங்க ஒரு வழியைக் கண்டுபிடித்தார்.
அதன்படி,கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் துணிகளில் இருந்து கரடி பொம்மைகளை உருவாக்கி வருகிறார்.இதன்மூலமாக,கொரொனோ தொற்றால் இறந்தவர்களை அவர்களின் குடும்பங்கள் நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று இர்மா டி லா பர்ரா நம்புகிறார்.