கொரோனா மரண எண்ணிக்கையில் உலகின் 3 வது இடத்தில் மெக்ஸிகோ.!
மெக்ஸிகன் சுகாதார அதிகாரிகள் நேற்று சமீபத்திய 24 மணி நேர அறிக்கையில் 688 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியது. இது மொத்த எண்ணிக்கையை 46,688 ஆக உயர்த்தியுள்ளது. மெக்சிகோவின் மக்கள் தொகை பிரிட்டனை விட இரு மடங்கு அதிகம்.
மெக்ஸிகோவில் இப்போது 424,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுகள் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று அங்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஒன்பது மாநில ஆளுநர்கள், கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விமர்சித்தனர்.