மெக்சிகோ போதை பொருள் கும்பலால் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்து அறுத்து கொலை!

மெக்சிகோவில் போதை பொருள் கும்பலால் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும். எனவே அங்கு சாதாரணமாக எழக்கூடிய சண்டையில் கூட பலர் கொல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்ற நகரில் உள்ள பிரதான சாலையில் இரண்டு வேன்கள் நின்றுகொண்டிருந்துள்ளன. இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேதனைகளை சோதனையிட்டபோது அங்கு கிடந்த பிணங்களை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2 பெண்கள் உட்பட 12 பேரின் உடல்களை போலீசார் அந்த இரண்டு வேன்களிலும் இருந்து கைப்பற்றியுள்ளனர். இவர்கள் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்த பிணங்கள் கிடந்த வேணுக்குள்ளேயே போதைப்பொருள் கும்பலால் தங்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஒரு துண்டு சீட்டும் கிடந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025