மெக்சிகோ: ஆண்களின் விதைப்பையில் சிறிய அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருக்கிறது என்றும் இதனால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகளாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு என்பது நமது சுற்றுசூழலுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு என்று கூறினாலும் பிளாஸ்டிக் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குறிப்பிட்ட சில ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் வாயிலாகவோ, சுவாச குழாய் வாயிலாகவோ சிறிய அளவில் மைக்ரோ துகள்களாக மனித உடலில் கலந்துள்ளது என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் தற்போது . வெளியாகியுள்ளது.
நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் நச்சுவியலாளரும், மேற்கண்ட ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர். ஜான் யூ மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பற்றி கூறுகையில் , மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் என்பது அனைத்து இடங்களிலும் தற்போது உள்ளது என்றும், இந்த ஆராய்ச்சியானது மனிதர்களுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை பற்றி புரிந்துகொள்வதற்கான முதல் படியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அவர் ஆய்வு சமயத்தில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஆண் இனப்பெருக்க அமைப்பில் இவ்வளவு விரிவாக ஊடுருவியிருக்கும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், ஆய்வுக்கு உட்படுத்தியவர்களில் சுமார் இரண்டு டஜன் ஆண்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட நாய்களின் விந்தணுக்களில் மைக்ரோபிளாஸ்டிக்ஸின் பரவலாக அதிக செறிவை (அளவை) கொண்டுள்ளது என ஆராய்ச்சி குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள், விந்தணு எண்ணிக்கை குறைபாடு மற்றும் ஆண் கருவுறுதல் தொடர்பான பிற உலகளாவிய பிரச்சனைகளுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றும், மைக்ரோபிளாஸ்டிக்கானது மனித விதைப்பையில் உள்ள சில நாளமில்லாச் சுரப்பியை சீர்குலைக்கும் இரசாயனங்கள் இருப்பதும் கண்டறிப்பட்டுள்ளது.
நீர், உணவு மற்றும் காற்றில் கூட மைக்ரோபிளாஸ்டிக்ஸ் ஊடுருவும் தன்மை கொண்டது. இது ஆண் இனப்பெருக்க உடற்கூறியலில் விதைப்பையில் மிகவும் நெருக்கமாக ஊடுருவி இருக்கிறது.
இந்த ஆய்வு முடிவுகளானது கடந்த ஆண்டு சீனாவில் ஒரு குழுவால் வெளியிடப்பட்ட ஒரு சிறிய பகுப்பாய்வை பின்பற்றி மேம்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளாகும்.
இந்த ஆய்வுக்காக, 16 முதல் 88 வயது வரை உள்ளவர்களின் விதைப்பை பரிசோதனைகளையும், உள்ளூர் கால்நடை மருத்துவ மனைகளில் கருத்தடை செய்யப்பட்ட 50 நாய்களிடமிருந்தும் சேகரிக்கப்பட்ட விந்தணுக்களை கொண்டு மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு மைக்ரோபிளாஸ்டிக் துகளையும் கணக்கிட முயற்சிப்பதற்குப் பதிலாக, அனைத்து உயிரியல் திசுக்களையும் (விந்தணு) கரைத்து, திடப்பொருட்களைப் பிரிப்பதன் மூலம் மொத்த பிளாஸ்டிக் அளவை ஆராய்ச்சியாளர்களால் கணக்கிட்டனர். அதில் எஞ்சியிருப்பதில் சுமார் 75% பிளாஸ்டிக் இருந்துள்ளது.
கண்டறியப்பட்ட மைக்ரோபிளாஸ்டிக்கில் பாலிஎதிலீன் பெருமளவில் இருந்துள்ளது. இது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகும், இது பேக்கேஜிங், பைகள் மற்றும் பல தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது.
பிளாஸ்டிக் மனித உடலில் எவ்வாறு ஊடுருவியது என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் உடலில் ஊடுருவிய இந்த மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் வெளிப்படையாக மனித செல்கள் செயல்படும் விதத்தை சீர்குலைக்கும்
பாலிவினைல் குளோரைடு எனும் PVC குழாய்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கும் இந்த ஆய்வில் மனித திசுக்களில் இருந்து கண்டறியப்பட்டன. இது குடிநீர் குழாய் வழியாக மனித உடலுக்குள் சென்று இருக்கலாம் என்றும், இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிகின்றன.
அதிக அளவு மைக்ரபிளாஸ்டிக்ஸ் இருப்பதால் விரைகளின் எடை குறைவதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே போல, பிளாஸ்டிக்கின் மற்றொரு பொதுவான ஆதாரமான பாலிஎதிலீன் டெரெப்தாலேட் அல்லது PET ஆகியவையும் மனித திசுக்களில் சேகரிக்கப்பட்ட மைக்ரோபிளாஸ்டிக்கில் கண்டறியப்பட்டுள்ளது, மனித விதைப்பையில் மைக்ரோபிளாஸ்டிக் அதிகரிப்பது வரும்காலத்தில் தீங்கு விளைவிக்கும் என்றும் நியூ மெக்சிகோ பல்கலைக்கழக ஆராய்ச்சி குழு கூறுகிறது .
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…