பிரான்சில் பள்ளி மாணவிகளுக்கு மாதவிடாய் பொருள்கள் இலவசம் !!!
- 97% பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருள்களுக்கு தான் அதிகமாக செலவு செய்கிறோம் என கூறினார்.
- இதன் முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் பத்தாம் வட்டாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உள்ள மாணவிகளுக்கு மாதவிடாய் பொருள்கள் இலவசம்.
ifop என்ற நிறுவனம் கடந்தமார்ச்4-ம் தேதி 12முதல்19 வயதுக்குட்பட்ட 1653 பெண்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இந்த 97% பெண்கள் மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருள்களுக்கு தான் அதிகமாக செலவு செய்கிறோம் என கூறினார்.
இதன் முதல் கட்டமாக பிரான்ஸ் தலைநகரான பாரிஸ் பத்தாம் வட்டாரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் உள்ள மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருள்கள் இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளனர்.
இதை பற்றி பத்தாம் வட்டார நகர முதல்வர் அலெக்ஸாண்ட்ரா கார்டபெர்ட் கூறும் போது பத்தாம் வட்டாரத்தில் ஆறு உயர் கல்வி பள்ளிகள் உள்ளனர்.மேலும் கல்வி பயிலும் மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் பொருள்கள் வழங்கப்படும் என கூறினார்.
மேலும் புதிய கல்வி ஆண்டில் இருந்து இந்த வசதிகள் செயல்படும். விரைவில் பாரிஸ் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இந்த வசதி கொண்டு வரப்படும் என கூறினார்.