பழம்பெருமை வாய்ந்த சிலைகள் தீயிற்கு பலினா..கொடூரம்..!மீனாட்சி அம்மன் கோவில் புனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கீடு..!

Default Image
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புரனரமைப்பு பணிக்கு நிதி ஒதுக்கி தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது 
  • தீப்பிடித்து சேதமடைந்த சிலைகள் தூண்கள் புனரமைப்பு பணிக்கு ரூ.18.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மதுரையில் எப்படி அழகர் போற்றப்படுகிராறோ அப்படி  மீனாட்சியும் போற்றப்படுகிறார்.அங்கு நடப்பது மீனாட்சி ஆட்சி தான் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்.கோவில் வானத்தை நோக்கி உயர்ந்து நிற்க்கும் 4 கோபுரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சிற்பங்கள் என்று மீனாட்சி அம்மன் கோவிலே ஒரு கலைக்கூடமாக திகலும் அவ்வாறு உலகப்புகழ்  பெற்ற திருத்தலமாக மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பிரசிதிப்பெற்று வருகிறது.

Image result for meenakshi temple"

இப்படி உள்ளூர் முதல் உலக புகழ்ப்பெற்ற இக்கோவிலில் கடந்த  2018ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது.இந்த  தீவிபத்தில் வீரவசுந்தராயர் மண்டபம் முற்றிலுமாக சேதமடைந்தது.

Image result for meenakshi temple fire accident"

இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட வீரவசுந்தராயர் மண்டபத்தில் உள்ள கல்சிற்பங்கள் மற்றும்  கல்தூண்கள் முற்றிலுமாக சேதமடந்தது பார்க்கும் நமக்கே பெரும் அதிர்ச்சியை தந்தது.

Image result for meenakshi temple"

இந்நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கற் சிலைகள் மர்றும் கல்தூண்களை புனரமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்து அதற்காக நிதியையும் அறிவித்துள்ளது.அதன்படி புனரமைப்பு பணிக்காக சுமார் 18.20 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Image result for meenakshi temple fire accident"

மேலும் புரனரமைப்பு பணிக்காக நாமக்கல் மாவட்டத்திலிருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும். இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக உள்ள கருமுத்து க ண்ணன் தகவல் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்