தடம் பட இயக்குநரின் அடுத்த படத்தில் களமிறங்கிய மேகா ஆகாஷ்
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை மேகா ஆகாஷ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார்.இவர் தனுஷுடன் சேர்ந்து “எனை நோக்கி பாயும் தோட்டா” படத்தில் நடித்ததன் மூலம் நாயகியாக கோலிவுட்டில் அறிமுகமானார்.
இந்நிலையில் நடிகை மேகா அதற்கு பிறகு பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் பூமராங் , பேட்ட ,வந்தா ராஜா வா தான் வருவேன் என பல் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
இந்நிலையில் இவர் அருண்விஜய்யை வைத்து தடம் மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருக்கிறார்.இந்த படம் ஆக்சன் கலந்த திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது