ஊரடங்கில் போட்டோகிராபராக மாறிய மெகா ஸ்டார்.!
ஊரடங்கில் பிரபல நடிகரான மம்முட்டி அவர்கள் போட்டோகிராபராக உருமாறி அவர் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் மம்மூட்டி. சில தமிழ் படங்களையும் நடித்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலர் உடற்பயிற்சி செய்தும், சமையல் செய்தும், புதிய முறைகளை கையாண்டும் உள்ள புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் மம்மூட்டி தனது போட்டோஷூட் பணியை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
அவர் தனது கேமரா மூலம் எடுத்து கொண்ட அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு ரியல் போட்டோகிராபர் எடுத்ததை போன்றுள்ள அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். அந்த புகைப்படத்துடன் காலை விருந்தாளிகள் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பலர் புகழ்ந்து பேசி கமென்ட் செய்து வருகின்றனர்.