கமல்ஹாசனின் மெகா ஹிட் படமான பாபநாசம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ரஜினிகாந்த் என்று கூறப்படுகிறது.
கடந்த 2013ல் மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திரிஷ்யம். 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் சுமார் 75 கோடி வரை வசூல் செய்தது மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றியை கண்டது. தமிழில் கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடித்து பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி 100கோடிக்கு மேல் வசூல் செய்தது.
பல திருப்பங்களுடன் சுயம்புலிங்கம் என்ற கதாபாத்திரத்தை தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் தற்போது பாபநாசம் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது ரஜினிகாந்த் தான் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆம் ஜீத்து ஜோசப் ரஜினியை வைத்து இயக்கவே ஆசைப்பட்டராம். ஆனால் ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை கமர்ஷியல் படங்களில் பார்த்து ரசித்ததை அடுத்து, எதார்த்தமான கேரக்டரில் நடிப்பதை விரும்ப மாட்டார்கள் என்று கருதி , சண்டைகள் இல்லாத பாபநாசம் படத்தை மறுத்ததாக கூறப்படுகிறது. அதனையடுத்து தான் அந்த படத்தில் கமல்ஹாசன் நடித்தும் பிளாக் பஸ்டர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மேலும், இன்று ஈரோடு கிழக்கு (தமிழ்நாடு), மில்கிபூர் (உ.பி.) தொகுதிகளிலும்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்களிக்க வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்…
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…