மேகா ஆகாஷ் அடுத்ததாக ஏ. எல். விஜய் இயக்கத்தில் ஒரு ஆந்தலாஜி படத்தில் நடிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற படத்தின் மூலம் கடந்தாண்டு அறிமுகமானார் மேகா. அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் உருவாகும் ராதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மேகா ஆகாஷ் தமிழில் அடுத்ததாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஏ. எல். விஜய் இயக்கும் ஒரு ஆந்தலாஜி படத்தில் மேகா ஆகாஷ் நடித்துள்ளதாகவும், இதன் 4 நாட்களுக்கான படப்பிடிப்புகள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடைப்பெற்றதாக கூறியுள்ளார். ஏ. எல். விஜய் தற்போது தலைவி என்னும் திரைப்படத்தின் ரிலீஸ்க்காக காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…