உலகின் புத்திசாலி மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா தேர்வு..!
உலகின் புத்திசாலி மாணவியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நடாஷா அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த 11 வயது மாணவி நடாஷா பெரி. இவர் தற்போது ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகம் உலகின் மிக புத்திசாலி சிறுமியாக நடாஷா பெரியை அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் பல கல்லூரிகள் மாணவர் சேர்க்கையின் போது எஸ்ஏடி மற்றும் ஏசிடி ஆகிய தேர்வுகளை நடத்தி அதனை அடிப்படையாக வைத்து மாணவர்களை தேர்ந்தெடுப்பர். அதேபோல அமெரிக்காவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த தேர்வு நடத்தப்படும்.
இதில் எடுக்கப்படும் மதிப்பெண்களை மாணவர்கள் அவர்களது விண்ணப்பத்தில் பதிவிட வேண்டும். இந்நிலையில் இந்த தேர்வுகளில் 11 வயதாகும் நடாஷா பெரியின் திறமையை கண்டு உலகின் புத்திசாலி மாணவியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2020 முதல் 2021 ஆம் ஆண்டு இளம் திறமையானவர்களுக்கான தேடலில் நடாஷா பெரி திறமையால் தற்போது உலகின் சிறந்த புத்திசாலி மாணவியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.