பிரபல நடிகை திரிஷாவிற்கு தன்னை போன்று ஆக நினைக்காதீர்கள் என்று கூறி மீரா மிதுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மீரா மிதுன், 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து சந்துரு கேஆர் இயக்கத்தில் வெளியான போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்தார். அதன் பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . சூப்பர் மாடலான இவர் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் ஒருவராவர். மேலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு சர்ச்சைகளுக்கு உள்ளாவதே இவரது வழக்கம். வழக்கமாக ரசிகர்கள் இவரை திட்டியும், ஆபாசமாக பேசியும் வருகின்றனர். பிரபலங்களை வம்பிழுத்து பப்ளிசிட்டி தேடி வருவதையே வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தற்போது திரிஷாவின் செல்பி புகைப்படத்தை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் திரிஷா இது உன்னுடைய கடைசி எச்சரிக்கை என்றும், அடுத்தமுறை என்னை போல் தோற்றத்தில் அல்லது என்னுடைய முடியை போன்று மார்பிங் செய்து என்னை போல் இருக்க வேண்டும் என்று நினைத்து போட்டோஷாப் செய்த புகைப்படத்தை வெளியிட்டால் சட்ட ரீதியாக பிரச்சினைகளை நேரிட ஆளாகுவீர்கள் என்று பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி விளாசி வருகின்றனர்.
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…
சென்னை : தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் 2025 2026-ஐ வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில்…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். கரும்பு சாகுபடிக்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழக வேளாண் பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்தார். . வேளாண்…
சென்னை : தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை 2025 - 2026 நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…