நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இணைந்த பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்ட முக்கிய பிரபலம்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக நம்ம வீட்டு பிள்ளை எனும் படம் அடுத்த மாதம் ஆயுதபூஜையை முன்னிட்டு வெளியாக உள்ளது. இப்படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்த பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து உள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல், சமுத்திரக்கனி, பாரதிராஜா, சூரி என பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில், மீரா மிதுனும் இணைந்துள்ளார். இவர் அண்மையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 இல் போட்டியாளராக இருந்து வெளியேற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.