மீனாட்சி திருக்கல்யாண வைபவம்..ஸ்ரீரங்கத்தில் வெகுச்சிறப்பு.!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கத்தில் 3 நாட்கள் ஹோமம், மற்றும் மீனாட்சி திருக்கல்யாண வைபவம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்தபிப்.,21முதல் நாளில் மஹாகணபதி ஹோமம், சங்கீத உபன்யாசம், நாம சங்கீர்த்தனம், திருப்புகழ் ,தேவாரம்,இன்னிசை என்று பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2ம் நாளான நேற்று முன்தினம் பூர்ண புஷ்கலா தர்மசாஸ்தா திருக்கல்யாணம், சிவபூஜை, தியான கீர்த்தனைகள், சிவ திவ்யநாமம், ஊஞ்சல் உற்சவம் ஆகியவைகள் வெகுச்சிறப்பாக நடைபெற்றன.பிப்.,24 நாள் 3ம் நாளான நேற்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது, நாமசங்கீர்த்தனம், நந்திகேஸ்வரர், சண்டிகேஸ்வரர், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவைகளும் நடைபெற்றது.இந்நிகழ்வில் பக்தர்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?
April 26, 2025
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!
April 26, 2025
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025