பிரபல இயக்குனர் மீது மீடூ புகார் அளித்த நடிகை!
- தொடரும் மீடூ சர்ச்சைகள்.
- பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளது. இதில் நடிகரை ஸ்ரீரெட்டி பல இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் குற்றசாட்டுகளை சுமத்தி வந்தார்.
இந்நிலையில், பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரில், இயக்குனர் அரிந்தம் செல் தனது அலுவலகத்துக்கு வரும்படி என்னை அழைத்தார். மாலை 5 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு அவர் மட்டுமே இருந்தார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் திடீரென்று எழுந்து வந்து என்னை பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டு போனார். அலுவலகத்தில் நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்றார்.
அவரது ஆசைக்கு உடன்பட மறுத்தேன். சிறிது நேரத்தில் அவரது மனைவி அங்கு வந்தார். அதன்பிறகு நான் அரிந்தமின் அலுவலகத்தில் இருந்து அழுதபடியே வெளியே சென்றேன்.” என்று கூறியுள்ளார்.