சீனாவை மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலகத்தையே,புதிதாக உருவாகியுள்ள கொரோனா வைரஸ் நடுங்க வைத்துள்ளது.இந்நிலையில் இந்த வைரசுக்கு பயந்து அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளன.
சீனர்களை அழைத்து வர முடிவு:
இந்நிலையில் வெளிநாட்டில் வாழும் சீன பயணிகளை குறிப்பாக வுஹான் நகர பயனியர்களின் நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர்களை கூடிய விரைவில் தாய் நாட்டிற்கு கொண்டு வர சீனா அரசு முடிவு செய்து உள்ளது.
சித்த மருத்துவம் தரும் இந்தியா:
இது குறித்து அந்நாட்டு வானொலி செய்தியாளர் இலக்கியா கூறிய தகவலானது,சீன அரசு தொடர்புடைய நாடுகளுடன் நோய் நிலையை வெளிப்படையாக கூறி வருவதுடன் , இந்த கொரோனா வைரஸ் மரபணு தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து வருகிறது.இந்த நோயை கட்டுப்படுத்தும் போராட்டத்தில் சீனா கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்பதில் முழு நம்பிக்கையையும் ஆற்றலையும் கொண்டுள்ளது என கூறினார்.
மேலும் வெளிநாட்டில் உள்ள சீன பயணிகளின் சிக்கல்களை கருத்தில் கொண்டு அவர்களை விரைவில் சிறப்பு விமானம் மூலம் தாய் நாட்டிற்கு கொண்டு வர சீன அரசு முடிவெடுத்துள்ளதாகவும் , இந்தியாவிலிருந்து தமிழ் நண்பர்கள் எங்களுக்கு ஊக்கத்தையும் , ஆதரவையும் அளித்த வண்ணம் உள்ளனர்.அவர்களில் சிலர் இயற்கையான முறையில் தயாரிக்கும் சித்த மருந்து தகவல்களை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை பலியானோரின் எண்ணிக்கை:
இன்று காலை வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸால் 1,900-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதாக சீன அரசு கூறியுள்ளது.நேற்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…