ஏப்ரலில் கொரோனாவிற்கு மருந்து.. அதிபர் டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு பின்னர் முதன்முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அடுத்த ஆண்டு ஏப்ரலில் கொரோனா தடுப்பு மருந்து அனைத்து அமெரிக்க மக்களுக்கும் கிடைக்கும் என கூறினார்.
இந்த தடுப்பூசி முன்னணி பணியாளர்கள், வயதானவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள அமெரிக்கர்களுக்கு சில வாரங்களில் விநியோகிக்கப்படும் “என்று டிரம்ப் கூறினார். ” நம்முடைய முதலீடு ஃபைசர் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதை சாத்தியமாக்கும், “என்று அவர் கூறினார்.
கடந்த 5-ம் தேதி இறுதியாக பேசிய டிரம்ப், “நீங்கள் சட்டப்பூர்வ வாக்குகளை எண்ணினால், நான் எளிதாக வெற்றி பெறுவேன். சட்டவிரோத வாக்குகளை நீங்கள் எண்ணினால், அவர்கள் எங்களிடமிருந்து தேர்தலைத் திருட முயற்சி செய்யலாம். நான் ஏற்கனவே பலவற்றை வென்றுள்ளேன். முக்கியமான மாநிலங்கள்புளோரிடா, அயோவா, இண்டியானா, ஓஹியோவில் பெரும் வெற்றிகளைப் பெற்றது என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025