தித்திக்கும் கரும்பின் மருத்துவ குணங்கள்…!!!
கரும்பு என்றாலே பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவதுண்டு. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் கரும்பு ஒரு முக்கிய அம்சமாக இடம் பெறுவதுண்டு. இந்த கரும்பில் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது. இது உடலுக்கு சக்தியை தருகிறது. இப்பொது கரும்பின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
மருத்துவ குணங்கள் :
மஞ்சள் காமாலை :
பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால் கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும். பிலிரூபின் என்ற நச்சு இரத்தத்தில் கலந்திருப்பது தான் இதற்க்கு முக்கிய காரணம். கரும்பின் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. எனவே மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கரும்பு சாற்றில், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து குடிக்க வேண்டும்.
சிறுநீரக கற்கள் :
சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்களை மருத்துவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க சொல்வார்கள். சிறுநீரக கல் உடல் வறட்சியினால் தான் உருவாகிறது. அதிகமாக தண்ணீர் குடித்து வந்தால் அவை கற்களை வெளியேற்றி விடும். சிறுநீரக கல் உள்ளவர்கள் கரும்பு சாற்றை தொடர்ந்து குடித்து வந்தால், இந்த பிரச்சனையிலிருந்து விடுதலை பெறலாம்.
சர்க்கரை நோய்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கரும்பு சாறு குடிக்க பயப்படுவார்கள். இதில் ஒரு உண்மை என்னவன்றால், கரும்பில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சீராக வைத்து கொள்ள உதவுகிறது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த பயமும் இன்றி சாப்பிடலாம்.
புற்று நோய் :
கருப்பில் உள்ள சாறு, பெருங்குடல், நுரையீரல் மற்றும் மார்பகப்புற்றுநோய் போன்றவற்றை குணப்படுத்துகிறது. கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருள் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.