இலந்தைப்பழத்தின் மருத்துவ பயன்கள்..!

Default Image

 

இலந்தைப்பழம் கிராமங்களில் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை காய்த்து பழம் பழுக்கக்ககூடிய பழவகை சிறியதாக ஆப்பிள் போன்று அழகாக இருக்கும். அதன் சுவை அலாதியாக இருக்கும் பழத்தைவிட அதன் செங்காய் நல்ல சுவையாக இருக்கும்.

இது முள்மரத்தில் வளரக்கூடிய பழம். அதிகமாக காட்டுப்பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும்.
இந்தப்பழங்களில் அதிக மருத்துவ குணமுண்டு அதன் பயன்களை காண்போம்.

1. நாட்டு எலந்தைப்பழத்தில் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்திருக்கும். நல்ல சுவையாக இருக்கும்.

2. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது.


3. கிடைக்கும் காலத்தில் அதிகமாக சாப்பிடுவதால் எலும்பு நன்றாக வளரும். பலம் பெறும்.


4. பற்கள் நுனுங்கிக்கொண்டே சிலருக்கு இருக்கும் இது கால்சியம் குறைபாடால் தான் நடக்கும். அப்படிப்பட்டவர்கள் இலந்தைப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் கால்சியம் சமன் ஆகும்.


5. பித்தத்தால் ஏற்படும் வாந்தி பேதி மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றிற்கு எலந்தைப்பழம் சாப்பிட்டால் பித்தம் குறையும்.


6. வயோதிகத்தால் ஏற்படும் உடல்வலி தீர எலந்தையை சாப்பிட்டோமானால் உடனே இந்தபிரச்னை தீர்ந்துவிடும்

.
7. செரிமானப்பிரச்னையை இந்த எலந்தைப்பழம் சரிசெய்து விடும்.


8. பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ்-க்கு பிறகு ஏற்படும் மூட்டு வலிக்கு எலந்தை மிகுந்த நிவாரணி.
எலந்தை கிடைக்கும் காலத்தில் அடை இடித்து வடை செய்து வைத்துக்கொள்வார்கள் இதுவும் நல்லது தான்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்