மூக்குரட்டையின் அற்புத மருத்துவ குணநலன்கள் !!!!!
மூலிகை தாவரமான மூக்குரட்டை பல அற்புத பயன்களை கொண்டது .இலை ,வேர்,தண்டு ,காய் ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்தது . இது தரையோடு படர்ந்து வளரும் சிறு கொடிவகையையை சேர்ந்தது .இதன் இலைப்பகுதி மேல் பகுதியில் பச்சை நிறமாகவும் கீழ் பகுதியில் வெளிர் சாம்பல்நிறமாகவும் இருக்கும் . தரைகளிலும் ,தரிசு நிலங்களிலும்,சாலைஓரங்களிலும் ,வாய்க்கால் ஓரங்களிலும் வளர்கிறது.
இதன் தாயகம் இந்தியா ஆகும் .இது தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கிடைக்கிறது.இதன் இலைகளை பறித்து அதன் சாற்றை ஒரு லிட்டர் நீரில் போட்டு அதை கால் லிட்டர் ராக காய்ச்சி வடிகட்டி அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ஆஸ்த்துமா ,சுவாச நோய்கள்,கீழ்வாதம் ,முதலிய நோய்கள் குணமாகும் .