அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும்… சவூதி அரசு அறிவிப்பு.!
இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும் என சவூதி அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமியர்கள் புனித தலமான சவூதி அரேபியாவில் உள்ள மெக்காவில் வருடந்தோறும் அரஃபா நாள் கொண்டாடப்படும். அதாவது நபிகள் நாயகம் இறுதியாக அரபா குன்றின் மேல் சொற்பொழிவு ஆற்றிய நாளை தான் அவர்கள் புனித நாளாக அனுசரித்து வருகின்றனர்.
அன்றைய தினம் அங்கு நடைபெறும் சொற்பொழிவானது இதுவரை 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. அப்படி, ஒலிபரப்பிய மொழிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாம்.
ஆம் , தமிழ் மொழியும் இதோடு சேர்க்கப்பட்டுள்ளதாம். மேலும், ஸ்பானிஷ் உள்ளிட்ட 4 மொழிகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாம். இனி மெக்காவின், அரஃபா நாள் சொற்பொழிவு தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என இஸ்லாமிய தலைவர் அல் சுதைஸ் தெரிவித்துள்ள்ளதாக அரபு நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.