ஊழியருடன் உறவில் இருந்ததால் பறிபோன CEO பதவி!
உலகம் முழுக்க பிரபலமான துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட் நிறுவனத்தில் ஒரு முக்கிய விதி செயல்பட்டு வருகிறது. அந்த விதியின் படி, அந்நிறுவனத்தில் மேலாளர் பதவிக்கு மேல் மேற்பதவி வகிப்பவர்கள் அங்குள்ள பெண் ஊழியர்களுடன் எந்தவித வெளி தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. அதாவது காதல், திருமணம், மற்ற உறவு வைத்துக்கொள்ளக்கூடாது.
அந்த விதியை மீறினால் யாராக இருந்தாலும் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படுவர். அப்படி, அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி இந்த புகாரில் சிக்கி பதவியில் இருந்து விலகியுள்ளார்.
மெக்டொனால்ட் நிறுவன சிஇஓ வாக பதவி வகித்த ஸ்டீவ் ஈஸ்டர்ப்ரூக் அந்நிறுவன பெண் ஊழியருடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து, அவர் அப்பதவியில் இருந்து விலகி விட்டார். அவர் பதவி விலகியதை அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தகவலாக வெளியிட்டுள்ளார்.