உலகநாயகனுக்காக ஒரே மேடையில் தல அஜித் மற்றும் தளபதி விஜய்?!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை கோலாகலமாக கொண்டாடபடவுள்ளது. நாளை கமல்ஹாசனின் சொந்த ஊரான பரமக்குடியில் கமல் தனது தந்தை ஸ்ரீனிவாசனுக்கு சிலை திறக்க உள்ளார். இந்த விழா நாளை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து நவம்பர் 8ஆம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் ஹே – ராம் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. அதில் கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
பின்னர் நவம்பர் 17ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் இளையராஜா பிரமாண்ட இசை கச்சேரி ண்ட நடத்த உள்ளார். இந்த விழாவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவிற்காக அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.
அஜித்குமார் அண்மை வருடங்களாக எந்தவித திரை துறை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள வில்லை. இந்த விழா இசைஞானி இளையராஜா நடத்தும் இசை நிகழ்ச்சி, உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பலர் கலந்துகொள்வதால் அஜித்தும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025