முடிந்தது தேர்தல் தொடங்கியது கூட்டணி பேச்சு வார்த்தை கையோடு கரம் கோர்கிறதா யானை..??
இந்தியாவில் தற்போது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த தேர்தலின் இறுதிகட்ட மற்றும் 7 ஆம் கட்ட தேர்தலானது நடைபெற்றது.இந்நிலையில் இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகளை நோக்கி அண்டை நாடுகளை உற்று நோக்க வைத்துள்ளது.
இந்நிலையில் தேர்தல் எல்லாம் ஓய்ந்த நிலையில் தற்போது கூட்டணி பேச்சு வார்த்தைகள் எல்லாம் சந்துக்கு சந்து பொந்துக்கு பொந்து நடைபெற்று வரும் சூழல் மெகா கூட்டணி நாங்கள் என்றும் மக்களை பாதுகாக்கும் கூட்டணி நாங்கள் என்றும் கூறி வாக்கு சேகரித்து வந்த நிலையில் தற்போது தெலுங்கு தேசத்தில் இருந்து மூன்றாம் கூட்டணி புறப்பட்டு உள்ள நிலையில் தேர்தல் முடிவிற்கு முன்னர் கூட்டணி குறித்த முடிவுகளில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்ற முடிவோடு முக்கிய கட்சிகள் உள்ளதாம்
இப்படி ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் சென்று கொண்டிருக்க தற்போது ஒரு செய்தி அரசியல் வட்டாரத்தில் வெளியாகியுள்ளது. நாளை டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கை பலத்தோடு யானை பலம் சேர்வது கைக்கு எந்த வகையில் பலத்தை அளிக்க போகிறது என்பதை நாளை உறுதி படுத்திவிடலாம் ,மேலும் 23 தேதியில் தெரிந்து விடும் பலம் யாருக்கு என்று அரசியல் விமர்சகர் நோக்குகிறார்கள் .