மனித வாழ்வில் மகிழ்ச்சி என்னும் மலர் அனுதினமும் பூக்கட்டும்!
பிறக்கும் போதே யாரும் மகிழ்ச்சியாய் பிறப்பதில்லை!
ஆனால் மகிழ்ச்சியாய் வாழும் தகுதியுடனே பிறக்கின்றனர்!
உன் மகிழ்ச்சியை ஏற்படுத்திக் கொள்ள நீயே முயற்சி செய்!
மனித வாழ்க்கையில் மகிழ்ச்சி எனது மிகவும் அவசியமான ஒன்று தான். இந்த மகிழ்ச்சியை தேடி மனிதன் பல இடங்களுக்கு சென்றாலும், அந்த மகிழ்ச்சி கிடைத்தாலும் சில நிமிடங்களில் மறைந்து விடுகிறது.
ஒவ்வொரு வருடமும் மார்ச் 20-ம் தேதி சர்வதேச மகிழ்ச்சி கொண்டாடப்படுகிறது. பிறரை மகிழ்விக்கும் பலரது வாழ்க்கையில் இன்று மகிழ்ச்சியை காண்பது மிகவும் கடினமாக தான் உள்ளது. மகிழ்ச்சி மகுடம் சூட்டப்பட்ட மனிதன், கவலையை மறந்து, துக்கத்தை மறந்து, தனது வாழ்நாளில் பிறரையும் மகிழ்வித்து வாழ்கிறான். ஆனால் இப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவானவர்களாக தான் உள்ளனர்.
பிறந்த குழந்தை முதல் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வரை கவலை என்றால் என்னவென்று தெரியாமல் தான் வாழ்கின்றனர்.ஆனால், ஒரு வயதிற்கு மேல் அவர்களுக்கு விபரம் தெரிந்தவுடன், முதலில் சிறிய கவலைகள் அவர்களை ஆட்கொள்ள துவங்குகிறது. இந்த சூழ்நிலையில் அவர்கள் மகிழ்ச்சியை இழக்கின்றனர்.
எனவே நம்மால் முடிந்தவரை நம்மை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைக்க முயல்வோம். அதுமட்டுமில்லாமல் நாமும் மகிழ்ச்சியாக இருப்பதற்கான வழிகளை தேடி அதன் வழியில் நடக்க முயல்வோம்.