மே -2 ஆம் தேதி -ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட தினம்

Published by
Venu

பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட தினம்  மே 2-ஆம் தேதி ஆகும்.

ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் பிறந்தது  மார்ச் 10, 1957-ஆம் ஆண்டு ஆகும்.பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார்.

இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.

ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா தன் 10 வது மனைவி அமிதியா அல் அட்டாசு என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்.

மே 2, 2011 அன்று  அமெரிக்காவின்  அப்போதைய அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க தொலைக்காட்சியில் பாகிஸ்தானில் உள்ள ஆப்டாபாத்தில் பின் லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.

Published by
Venu

Recent Posts

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

31 minutes ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

2 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

3 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

3 hours ago

அறிவில்லாமல் இதை செய்யாதீங்க! டென்ஷனாகி இளைஞர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரஜினிகாந்த்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…

4 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! மத்திய அமைச்சர் புதிய அறிவிப்பு!

டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

5 hours ago