மே -2 ஆம் தேதி -ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட தினம்
பயங்கரவாதி ஒசாமா பின் லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்ட தினம் மே 2-ஆம் தேதி ஆகும்.
ஒசாமா பின் முகம்மது பின் ஆவாட் பின் லாதின் பிறந்தது மார்ச் 10, 1957-ஆம் ஆண்டு ஆகும்.பொதுவாக ஒசாமா பின் லாடன் அல்லது ஒசாமா பின் லேடன் என அறியப்படும் இவர் அல் கைதாவைத் தோற்றுவித்தவர்.செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் உட்பட பல தாக்குதல்களின் காரணகர்த்தாவாகக் கருதப்படுகிறார்.
இவர் சவூதி அரேபியாவின் செல்வந்தர் குடும்பமான பின் லேடன் குடுப்பத்தைச் சேர்ந்தவராவார். இவர் 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் இசுரேலுக்கான தமது ஆதரவை விலக்கி இசுலாமிய நாடுகளில் இருந்து தமது படையணிகளைத் திரும்பப் பெறுமளவும் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் குடிகளையும் அதன் படைத்துறையினரையும் கொலை செய்யுமாறு முசுலிம்களை வேண்டி இரண்டு படாவா எனப்படும் அறிக்கைகளை விடுத்தார்.
ஒசாமாவின் தந்தை முகம்மது பின் லேடனுக்கு மொத்தம் எத்தனைப் பிள்ளைகள் என்பதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. எனினும் சில தகவல்களின் படி அவர் மொத்தம் 55 குழந்தைகளுக்கு தந்தை என கூறப்படுகிறது. அவர் மொத்தம் 22 பெண்களை மணந்துள்ளார் ஆனால் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இசுலாமிய சட்டப்படி 4 மனைவிகளை மட்டுமே கொண்டிருந்தார். ஒசாமா தன் 10 வது மனைவி அமிதியா அல் அட்டாசு என்பவருக்கு ஒரே மகனாக பிறந்தார். சில கணிப்பீடுகளின் படி ஓசாமா அவரது தந்தைக்கு 7 வது மகனாவார்.
மே 2, 2011 அன்று அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பராக் ஒபாமா அமெரிக்க தொலைக்காட்சியில் பாகிஸ்தானில் உள்ள ஆப்டாபாத்தில் பின் லேடன் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதாக அறிவித்தார்.