நடிகர் சூர்யா தற்போது காப்பான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது. லைகா தயாரித்துள்ள இப்படத்தை கேவி ஆனந்த் இயக்கியுள்ளார்.
இந்தப்படத்தை அடுத்தது இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங்கும் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிட்டது. இப்படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது.
இந்த படத்தை அடுத்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் விஸ்வாசம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். இப்படத்தில் நாயகியாக நடிகை காஜல் அகர்வால் ஒப்பந்தமாகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. மாற்றான் படத்துக்கு பிறகு மீண்டும் சூர்யா – காஜல் அகர்வால் ஜோடி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …