பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானிலேயே இல்லை… தேடும் பணி நடைபெறுகிறது… சொல்கிறார் பாக்., அமைச்சர்…
இந்தியாவின் காஷ்மீர் புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவன், பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன், மசூத் அசார். இவனை இந்திய அரசுகைது செய்த போது இந்திய விமானத்தை பயணிகளுடன் கடத்திய தீவிரவாதிகள் மசூத் அசாரை விடுவிக்க கெடு விதித்து, இந்திய மக்களை காப்பாற்ற அவனை இந்திய அரசு விடுவித்தது. இந்நிலையில்,இவர் பாகிஸ்தானில் சுதந்திரமாக இருப்பது வெளிச்சத்திற்க்கு வந்தது. இந்தியாவின் முயற்ச்சியால் சர்வதேச தீவிரவாதியாக ஐநா அறிவித்தது. இந்நிலையில்,’ மசூத் அசார் காணாமல் போய்விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பல வருடங்களாக பாகிஸ்தானிலேய பதுங்கியிருந்த மசூத் அசார் தங்கள் நாட்டில் இல்லை என மறுத்து வந்த பாகிஸ்தான், பின்னர் பல ஒப்புக்கொண்டது. தற்போது, பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் எப்.ஏ.டி.எப். எனப்படும் நிதி நடவடிக்கை குழு மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட பாக்கிஸ்தான் அமைச்சர் முகமது ஹமீத் அசார் கூறியது, ஜெய்ஷ் – இ – முகமது தலைவர் மசூத் அசார் குடும்பத்துடன் காணாமால் போய்விட்டார்.அவரை தேடும் பணி நடக்கிறது என்றார். இதில், மசூத் அசார் விவகாரம் தொ டர்பாக இந்த மாநாட்டில் ஆலோசனை நடந்த நிலையில் காணாமல் போனதாக பாக்கிஸ்தான் அமைச்சர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.