பாகுபலி 2 சாதனையை இரண்டே மாதங்களில் முறியடித்த மாஸ்டர்..!
தமிழகத்தில் பாகுபலி 2 ஷேர் சாதனையை விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்க இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். ஆண்ட்ரியா, கௌரி கிஷன், அர்ஜுன் தாஸ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றியை பெற்று நல்ல வசூல் செய்து பல சாதனைகளை படைத்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த மூன்று வருடங்களாக மிகப்பெரிய சாதனை படைத்த பாகுபலி படத்தின் 2 வது பாகத்தின் சாதனையை மாஸ்டர் படம் வெளியான இரண்டு மாதங்களில் முறியடித்துள்ளது.
அது என்ன சாதனைவென்றால் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிகம் தமிழகத்தில் ஷேர் வந்த படங்களின் பட்டியலில் முதலிடத்தில் பாகுபலி 2 இருந்தது. 3 ஆண்டுகள் கடந்த நிலையில் மாஸ்டர் படம் வெளியான இரண்டே நாட்களில் இந்த சாதனையை முறியடித்து தமிழக்தில் அதிக ஷேர் வந்த படங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மேலும் மாஸ்டர் படம் இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகின்ற நிலையில் இன்னும் சில தினங்களில் 50 நாட்களை கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.