தளபதி விஜயுடன் மோத தயாரான சூர்யா! இரு துருவங்களுக்கு இடையே களமிறங்க உள்ள விஷால்!?

- தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியை ரிலீஸாக வாய்ப்புள்ளதாம்.
- அதே தேதியில் சூர்யா நடிப்பில் உருவாகும் சூரரை போற்று திரைப்படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம்.
தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்த்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளதாம். தமிழ் புத்தாண்டு விடுமுறையை கணக்கிட்டு இந்த ரிலீஸ் தேதி உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
இதே போல சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூரரை போற்று திரைப்படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் டிசம்பர் மாதமே ரிலீசாக இருந்ததாம். ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ரிலீஸ் தாமதமானதாம். அதனால், ஏப்ரல் மாதம் கண்டிப்பாக ரிலீஸ் செய்யும் முனைப்பில் படக்குழு உள்ளதாம். இதனால், விஜய் படமும் சூர்யா படமும் ஒரே நாளில் ரிலீசாக அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதற்கிடையில் விஷால் நடிப்பில் இரும்புத்திரை படத்தின் இரண்டாம் பாகமான சக்ரா படமும் அதே தேதியில் ரிலீசாக உள்ளதாம்.