என்ன நண்பா ரெடியா?வெளிவர காத்திருக்கும் 2வது சிங்கிள்…அட்டாகசத்தில் ரசிகர்கள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக களமிரங்கியுள்ளர் நடிகர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடிகர் விஜய் குரலில் ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளிவந்தது. பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தின் 1,2,3 லூக்குகளும் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. மேலும் பல பல சாதனைகளை சமூக வலைத்தளங்களில் செய்து வருகிறது.
இந்நிலையில் படத்தின் 2 சிங்கிள் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்து இருந்த நிலையில் படத்தின் 2 சிங்கிள் பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி 2வது சிங்கிள் பாடல் இன்று மாலை வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆரவராம் செய்ய காத்திருக்கின்றனர்.