மாஸ்டர் திரைப்படத்திற்கான ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய்சேதுபதி நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமாக வெளியிடப்பட்டு இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. சில எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும் படம் இன்று வரையிலும் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தை டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், மாஸ்டர் படத்திற்கான ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் தற்போது வாங்கியுள்ள நிலையில் மாஸ்டரின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படம் இந்த மாதம் தான் திரையிடப்பட்டு உள்ளதால் ஒரு மாதத்திற்குப் பின்பு தான் ஓடிடியில் படங்கள் வெளியிடுவதற்கு அனுமதி கிடைக்கும். அது போல மாஸ்டர் திரைப்படமும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ஓடிட்டியில் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் வட்டாரம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. உதாரணமாக, மத்திய அமைச்சரும், பாஜக…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் லக்னோவில்…
டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பல வீரர்கள் பேட்டிங்கிலும், பல வீரர்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். ஆனால், அதிக…
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…