தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் அவர்களின் மாஸ்டர் படத்திலிருந்து டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன்,சாந்தனு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது .
கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி போன இந்த படத்தின் ரிலீஸ் தேதி திரையரங்குகள் திறந்த பின்னரும் இன்னும் அறிவிக்கப்படவில்லை . விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளி ட்ரீட்டாக சன் தொலைக்காட்சியின் யூடுயூப் சேனலில் வெளியிடப்படும் என்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
அதன்படி ரசிகர்களின் காத்தருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து மாஸ்டர் டீசர் வெளியாகியுள்ளது . மாஸ்ஸான பின்னணி இசையில் பட்டைய கிளப்பும் வசனங்களுடன் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் என்டரி வேற லெவலில் உள்ளது சூப்பரான சண்டைக்காட்சிகளுடன் இந்த டீசரில் தளபதி கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .
ஒரு சில காட்சிகளில் மட்டுமே மாளவிகா மோகனன் என்டரி கொடுத்துள்ளார் . மொத்தத்தில் மாஸ்டர் டீசர் தளபதி ரசிகர்களுக்கு தீபாவளியை பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது என்றே கூறலாம். தற்போது டீசரை தளபதி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…
ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…